About My Kitchen - Gifted to me by Abdul Kalam Venkadu Maesthri 2007,Renovating by Arivazhagan Periyappa,Yercaud Road Maesthri 2023

உயிர்கள் பிறப்பது பாசத்துக்காக ..
உலகம் துடிப்பது பாசத்துக்காக..
உறவு உள்ளவரை உலகம் நமக்காக..!
இது பல கோடி உயிர் தோன்றி மடிகின்ற பூமி..
பாசத்தின் வேர் மட்டும் மடியாது சாமி..
அதனால் தான் சலிக்காமல் சுழழுது பூமி..

வள்ளலார் 1867- ஆம் ஆண்டு மே 23 -ஆம் தேதி கடலூர் மாவட்டம் வடலூரில் "தர்மசாலை' அமைத்து அன்னதானத்தை வழங்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு தற்போது வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது 21 அடி நீளம். 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது.



இந்த அடுப்பை அணைக்கவே கூடாது என்பதற்காக இங்கு தீப்பெட்டியே வாங்குவதில்லை. இரவு வேளையில் சமையல் செய்யாத வேளையிலும் கூட நெருப்பு அணையாமல் இருக்க பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார்.

 அன்னதானம், ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இத்தனை ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஏழைகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் 5 முறை அன்னதானமும், விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறும். பொது முடக்கக் காலத்திலும் இங்கு தினந்தோறும் அன்னதானம் வழங்குவது தடைப்படவில்லை.