டேட்ஸ் லட்டு : கருப்பு பேரிச்சம் பழம் கொட்டை நீக்கியது 10,கோதுமை அவல் 1 கப்,முந்திரி பாதாம் பிஸ்தா திராட்சை - 1 கப் நறுக்கியது,கசகசா- சிறிதளவு, வெல்லம் 1 கப் நுணுக்கியது,நெய் ஒரு கப்..இவை அனைத்தும் ஒரு பாத்திரத்தில் கலந்து லட்டு போல் பிடித்து உண்ணவும்.

வெந்தயம் - 1 கப் ஊறவைத்தது
ரோஸ் வாட்டர் சர்பத் :
பன்னீர் ரோஜா இதழ்கள் - 5 ரோஜா,
ரோஸ் வாட்டர் - 1 சிறிய பாட்டில்,
ரோஸ் சர்பத் எசன்ஸ்- சிறிதளவு,
சப்ஜா விதைகள் சிறிதளவு - ஊற வைத்தது,
சேகோ - ஊற வைத்தது,
பவுடர் சக்கரை - சிறிதளவு,
குங்குமப்பூ 10 நரம்பு.
ஒரு பாத்திரத்தில் ரோஸ் வாட்டர்,சப்ஜா விதைகள்,சேர்த்து கலக்கவும்.ரோஜா இதழ்களை இடித்து கலக்கவும்.பவுடர் சர்க்கரையை சேர்க்கவும்.ஒரு டம்ளரில் ஊற வைத்த சாகோ மற்றும் ரோஸ் சர்பத் சேர்த்து கலக்கிவிடவும்.மேலே ரோஸ் வாட்டர் கலவையை போடவும்.குங்குமப்பூ தூவி குடிக்கவும்.
ஓமம் வாட்டர் சர்பத் :
ஓமன் வாட்டர் - 1 சிறிய பாட்டில்,
நன்னாரி சர்பத் எசன்ஸ் - சிறிதளவு,
பாதாம் பிசின் - ஊறவைத்தது,
எழுமிச்சை சாறு - 1/2,
இஞ்சி இடித்தது - சிறிதளவு,
உப்பு - 1 சிட்டிகை,
நாட்டுசக்கரை - 1 கப்,வெட்டிவேர் - 1.
ஒரு செம்பு பாத்திரத்தில் ஓமம் வாட்டர், நன்னாரி சர்பத்,பாதாம் பிசின்,எழுமிச்சை சாறு,இஞ்சி,உப்பு, நாட்டுசக்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும்.அதில் வெட்டிவேரை போட்டு மூடி ஊறவைத்து பருகவும்.
துளசி தீர்த்தம் :
வெந்நீர் - 1 கலசம்,
மணுகா தேன் - 10 கரண்டி
ஏலக்காய் - 4
லவங்கம் - 10
வன துளசி - கைப்பிடி அளவு
பச்சை கற்பூரம் - 4
ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை
அனைத்தையும் கலந்து இளஞ்சூடாக காலையும் மாலையும் பருகவும்.
ஜான்சி ராணி வெந்தய குழம்பு :

Cauliflower Masala Cooked by Me
கடுகு சிறிதளவு
கருவேப்பிலை காயவைத்து பொடித்தது 10
கடலை பருப்பு - 1 கப்
உடைத்த உளுத்தம் பருப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 கப்
பூண்டு - நெருப்பில் வாட்டியது-1
சின்ன வெங்காயம் - நெருப்பில் வாட்டியது-10
தக்காளி நெருப்பில் வாட்டியது -2
கொத்தமல்லி நறுக்கியது சிறிதளவு
உப்பு - சிறிதளவு
வரமிளகாய் - 10
தேங்காய் - 1/2 மூடி துறுவியது
வெல்லம் - சிறிதளவு
கரும்புளி - 1 உருண்டை
வெந்தயம்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு,வரமிளகாய்,புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியே வைக்கவும்.உரித்த பூண்டு,வெங்காயம்,தக்காளி சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
கலவைகளை ஒன்றுன்சேர்த்து கடுகு,கருவேப்பிலை பொடி,உப்பு,நல்லெண்ணெய்,வெல்லம்,துருவிய தேங்காய்,கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
வாழைத்தண்டு ஜூஸ் :
வாழைத்தண்டை மேற்புறம் சக்கையை நீக்கிவிட்டு நடு தண்டை சிறிது சிறிதாக அரிந்து,மிக்சி ஜாரில் மோர் சேர்த்து அரைத்து உப்பு,இஞ்சி,கொத்தமல்லி சேர்த்து பருகவும்.
வெண் பூசணி துருவல் :
வெண் பூசணியை தோல் விதை நீக்கி துருவி கொள்ளவும். வேர்கடலை தோல் நீக்கி திப்பி திப்பியாய் அரைத்து கொள்ளவும்.தேங்காயை துருவி கொள்ளவும்.வெங்காயத்தை துருவி கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் எள்ளு சேர்த்து வெண்பூசணி துருவல்,வேர்கடலை பொடி,தேங்காய் துருவல்,வெல்லம் சேர்த்து உண்ணவும்.