ஆரோக்கிய சமையல்

சீஸ் கேக் :
ஜெர்மனி திருச்சபை பிரசாதம்.

மோஜரெல்லா/கிரீம் சீஸ் - 1 கப்,துருவி கொள்ளவும்.
பன்னீர் -1 கப்,துருவியது.
புளிக்காத கட்டி தயிர் - 1 கப்.
பால் பவுடர் - 1 கப்.
சர்க்கரை ஒரு கப் - அரைத்து கொள்ளவும்.
ஏலக்காய் - 4,பச்சை கற்பூரம் - 4 இடித்து கொள்ளவும்,தேங்காய் வழுக்கை - 1 கப் நறுக்கி கலந்து கொள்ளவும்.
தேங்காய் பிஸ்கட்/வறுக்கி - 1 பாக்கெட்டை நொறுக்கி,அதனுடன் தேவைக்கேற்ப நெய் சேர்க்கவும்.ஒரு அகல பாத்திரத்தில் சீஸ்,பன்னீர்,தயிர்,பால் பவுடர்,சர்க்கரை சேர்த்து பிணையவும்.பிறகு ஒரு  கேக் டின்னில் பேக்கிங் ஷீட் வைத்து,பிஸ்கட் கலவையை கொட்டி நிறவி விடவும்.பிறகு அதன் மேல் சீஸ் கேக் கலவையை பரப்பவும்.அதன் மேல் ஏலக்காய் பச்சை கற்பூரம் தேங்காய் வழுக்கை கலந்து பூசவும்.பிறகு ஒரு நாள் குளிரில் வைத்து பரிமாறவும்.

தேன் நெல்லி :

கிரீஸ் திருச்சபை பிரசாதம்

மலை நெல்லிக்காய் - 10 கொட்டை நீக்கி சிறிதாக அரிந்து கொள்ளவும்.கற்கண்டு - 10 உடைத்து கொள்ளவும்.நெல்லியயும் கற்கண்டையும் மண் சட்டியில் சேர்த்து காற்று புகாதபடி கயிறு கட்டி 3 நாட்களுக்கு மூடி வைக்கவும்.ஒவ்வொரு நாளும் சட்டியில் குலுக்கி விடவும்.சுக்கு மிளகு திப்பிலி - சம அளவு எடுத்து நெய் சேர்த்து இடித்து கொள்ளவும்,3 நாட்களுக்கு பிறகு நெல்லியில் சேர்த்து கொள்ளவும்.மலை தேன் - சிறிதளவு உள்ளங்கையில் எடுத்து,நெல்லியுடன் கலந்து மாத்திரை போல் விழுங்கவும்.

அரி நெல்லி ஊறுகாய் :

கொல்லூர் மூகாம்பிகை கோவில் ஸ்தல வ்ருக்ஷம் 


ஒரு கம்பு கொண்டு நெல்லி மரத்தடியில் தடவினால் அரி நெல்லி தானாக சிரித்து முத்து போல் உதிர்ந்து விடும்.அதை மடியில் பொறுக்கி,ஓடையில் கழுவி எடுத்து கொண்டு,அம்மியில் வைத்து இடித்து கொள்ளவும்.அதில் சாம்பார் தூள்,உப்பு சேர்த்து ஒரு வெண்கல பாத்திரத்தில் போட்டு,துணி வைத்து மூடி இரண்டு மணி நேரம் ஊற விடவும்.சிறிதளவு இந்துப்பு,பெருங்காயம்,கருவேப்பிலையை காய வைத்து நெல்லியில் நொறுக்கவும்.

ப்ரூட் சாலட் :

புழக்கடை சென்பகமாதேவி பிரசாதம்

மாதுளம் பழம் 1- மேல் கீழ் பகுதி நீக்கி நான்காக பிளந்து விதைகள் எடுக்கவும்.
சாத்துக்குடி/ஆரஞ்சு 1- நான்காக பிளந்து சுளைகளை பிரித்து,இரண்டாக வெட்டி விதை நீக்கவும்.
பப்பாளி 1- தோல் சீவி,விதை நீக்கி நறுக்கி கொள்ளவும்.சாட் மசாலா தூவவும்.
ஆப்பிள் 1- தோல் நீக்கி தண்டு நீக்கி வெட்டி மசித்து கொள்ளவும்.கற்கண்டு சேர்த்து மூடி வைத்து தேங்கும் நீரை பருகவும்.
அன்னாசி 1- தோலை அரிந்துவிட்டு,மேல் கீழ் தண்டு நீக்கி விட்டு,வெட்டி கொள்ளவும்.வெய்யிலில்  காய விட்டு உண்ணவும்.
திராட்சை - கொத்தை பிய்த்து போட்டு இரண்டு முறை தண்ணீரில் கழுவவும்.உரலில் லேசாக இடித்து நீர் சேர்த்து குளிரில் ஒரு நாள் வைக்கவும்.

செவ்வாழை - தோல் நீக்கி வெல்லம் சேர்த்து மசித்து கொள்ளவும்.பச்ச அரிசியை ஒரு மணி நேரம் பொங்கும் வரை ஊற வைத்து,துணியில் உலர்த்தி அரைத்து மாவு செய்து கொள்ளவும்.அதில் இடித்த வெல்லம் பொடித்த ஏலக்காய்,சிறிது தேங்காய் தண்ணீர் விட்டு வெல்ல கட்டி வடிவில் விலக்கு போல் பிடித்து அம்மனுக்கு மாவிளக்கு இடவும்.பிறகு தேங்காயை சிறிது சிறிதாக நறுக்கி,விளக்கின் மேல் வாழைப்பழ கலவையை வைத்து உண்ணவும்.

முழாம்பழம் - தோல் நீக்கி இரண்டாக அறுத்து,விதைகளை நீக்கி கையாலே பிணைந்து சக்கரை சேர்த்து நீரில் கலந்து பருகவும்.
தர்பூசணி - கோணல் மாணலாக அறுத்து நடுவே இருக்கும் நீர் நிறைந்த சக்கையை எடுத்து அரிந்து உண்ணவும்.
மாம்பழம் - புளிப்பாக நாராக இருப்பின்,தோலை சீவி விட்டு,கையிலே பிழிந்து குவளையில் எடுத்து,அல்லது நெருப்பிலே வாட்டி பிழிந்து மோர்,வெல்லம் கலந்து பருகவும்.
சீத்தாப்பழம் - நன்கு பழுக்க விட்டு, அழுத்தினால் விரல்கள் உள்ளே போகும் பதத்தில் பிரிக்க வேண்டும்.அதன் முன் பிரித்தால் பழம் பழுக்காது.காயாகவே அழுகிவிடும்.
கொய்யா - காயாக மொத்தமான தோலை துருவி பித்தம் வாந்திக்கு கொடுக்கலாம்.பழமாக நன்கு அமுங்கும் வரை பழுத்ததும்,அரைத்து பருகலாம்.






Comments

Popular posts from this blog

Less oil No Cook

மகா தேவி