மகா தேவி

சுட்ட சோளம் 

மக்கா சோளம் பிஞ்சு - 4
குழம்பு மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி 
ரீஃபைண்ட் எண்ணெய் - 2 மேஜை கரண்டி
எலுமிச்சை - 1

மக்கா சோளத்தை சோவையை நீக்கி விட்டு மூழ்கும் வரை ஜலம் நிரப்பி அரை மணி நேரம் வேக விடவும்.பின்னர் ஆற விட்டு.மிளகாய் தூள் உப்பு எண்ணெய் மூன்றையும் ஒரு கிண்ணத்தில் கலந்து,எலுமிச்சை தொட்டு,சோளத்தின் மீதி தடவவும்.நெருப்பில் காட்டி வெடித்து வரும் வரை 10 நிமிடம் சுடவும்.

மைதா தோசை வெங்காய வதக்கல் 

மைதா மாவு - 1/4 கிலோ
உப்பு - 4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 நீளவாக்கில் அரிந்தது 
Saffola சன்பிளவர் எண்ணெய் - 100 மில்லி
மிளகு நுணுக்கியது - 20

மைதா மாவை தோசை மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கட்டி படாமல் கையில் கரைத்து கொள்ளவும்.ஒரு தோசை கல்லில் எண்ணெய் விட்டு சிறிது மொத்தமாக தோசை வார்க்கவும்.திருப்பி போட்டு மேலே எண்ணெய் ஊற்றவும்.வெந்ததும்,திருப்பி போட்டு முறுகளாக சுட்டு எடுக்கவும்.தோசை தயார்.இது பருப்பு முள்ளங்கி குழம்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.

வெங்காயம் வதக்கல் - அரிந்த பெரிய வெங்காயத்தை அதே தோசை கல்லில் போட்டு 50 ml எண்ணெய் ஊற்றி சிவக்க வறுக்கவும். பொறிக்க கூடாது.வெங்காயத்தின் நீர் தன்மை போகாமல் 5 நிமிடம் மிதமான சூட்டில் கிளற வேண்டும்.பின்னர் மிளகு பொடி,உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.பரிமாறவும்.

பொட்டுக்கடலை மைசூரிபா

பொட்டுக்கடலை - 1/4 கிலோ மொறுகளாக மென்று பார்த்து வாங்கவும்.
கரும்பு வெள்ளம் - 1/4 கிலோ
டால்டா - 1/4 கிலோ
நெய் - 50 ml
ஏலக்காய் - 4
பச்சை கற்பூரம் - 4

பொட்டு கடலை ஊதி மிக்சியில் பொடித்து கொள்ளவும்.ஒரு வாணலியில் கரும்பு வெள்ளம் சம அளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ளவும்.இரண்டு பாகு பதம் வந்ததும்,பொடித்ததை சேர்த்து கட்டிபடாமல் மிதமான தீயில் கிளறவும்.5 நிமிடம் கழித்து குமிழி வெடித்து வரும்.அப்பொழுது டால்டா சிறிது சிறிதாக சேர்க்கவும்.அடிப்பிடிக்காமல் கிளறவும்.வெந்ததும் பச்சை வாடை போகி நெய் மேலே மிதக்கும் வாசம் வரும்.அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய் பச்சை கற்பூரம் நெய் இடித்து சேர்க்கவும்.ஒரு தட்டில் நெய் தடவி கலவையை கொட்டி ஆற விடவும்.ஆறியதும் சிறிது துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

கார பொரி

உப்பு அரிசி பொரி - 1/4 கிலோ
பழுப்பு நிற காய்ந்த பூண்டு - 2 
கடுகு - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 5 பெரியது
கருவேப்பிலை காய்ந்தது - 10
மஞ்சள் பொடி - 2 மேஜை கரண்டி
மிளகு பொடி - 1 மேஜை கரண்டி 
உப்பு - 1 மேஜை கரண்டி
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
கடலை எண்ணெய் - 50 ml
நிலக்கடலை - ஒரு கைப்பிடி
பொட்டு கடலை - ஒரு கைப்பிடி

ஒரு வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி,கடுகு,கருவேப்பிலை,வரமிளகாய் சிறிதாக பிய்த்து போட்டு,நிலக்கடலை கையில் தேய்த்து ஊதி,பொட்டுக்கடலை கசடு நீக்க ஊதி,சேர்த்து 2 நிமிடம் பொண் நிறம் ஆகும்வரை வறுக்கவும்.

பின்னர் உப்பு,பெருங்காயம்,மஞ்சள் பொடி,மிளகு பொடி சேர்த்து நுறையிடும் வரை கிளறி இறக்கவும்.

இந்த கலவையை ஒளி புகும் தரமான உப்பு அரிசி பொரியில் கலந்து விடவும். ஆறியதும் பரிமாறலாம்.

உளுத்தம் கஞ்சி 

கருப்பு உளுந்து - 100 கிராம்
தேங்காய் துருவை - 100 கிராம்
ஏலக்காய் - 4
பச்சை கற்பூரம் - 2
கரும்பு சர்க்கரை - 50 கிராம்

கருப்பு உளுந்தை நன்கு கழுவி காய வைத்து, வாணெளியில் எண்ணெய் விடாமல் வறுத்து ஏலக்காய், பச்சைக்கற்பூரம்,சர்க்கரை சேர்த்து பொடித்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி உளுந்து பொடியை போட்டு 1/4 மணி நேரம் வேக விடவும்.பொங்கி குமிழிகள் வரும்போது தேங்காய் துருவலை சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.

Comments

Popular posts from this blog

ஆரோக்கிய சமையல்

Less oil No Cook