கொற்கை



மூலம் - தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள்[2]

மொத்தம் தோண்டப்பட்ட 12 குழிகளில் சில முக்கியக்குழிகள்,

இரண்டாம் குழி

1.62மீ ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று கிடைத்தது. தமிழகத்தின் தொன்மையான இதே தாழி அடக்கமுறை ஆதிச்சநல்லூரிலும் காணப்படுகிறது.

மூன்றாவது குழி

செவ்வக வடிவ கட்டிடப்பகுதி.

நான்காம் குழி

செங்கற்சுவர் பகுதி. இதன் செங்கற்கள் 14*29*7.5 செ.மீ. அளவினைக் கொண்டிருந்தன. மேலும் இக்கட்டிடத்தின் கீழ் கிணற்றின் உறைகளும் அதன் தெற்கில் கழிவு நீர் கால்வய்க்கான சுவடுகளும் உள்ளன. மேலும் இக்குழியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், சில கரித்துண்டுகளும் கிடைத்துள்ளது.

ஐந்தாவது குழி

நான்கு சாடிகள், சில எலும்புத்துண்டுகள், மட்கலண்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளன.

மற்ற குழிகள்

சில சங்குகள், சங்கு வளையல்கள், குறியீடுகள் கொண்ட பாணையோடுகளும் உள்ளன.