Less oil No Cook

எலுமிச்சை கொண்டகடலை அவல்:

 வரசித்தி விநாயகர் கோவில் பிரசாதம்.

கொண்டகடலை ஒரு கப் 6 மணி நேரம் ஊறவைத்து,நுரைத்து வந்ததும் கழுவி திரும்ப 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
வெள்ளை நீட்டமான அவலை ஒரு கப் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து வடித்து கொள்ளவும்.
அவலையும் கொண்டகடலையும் ஒரு பாத்திரத்தில் கலக்கவும்.
எலுமிச்சம்பழம் ஒன்று அதில் பிழிந்து சிறிது அறிந்து வைத்த வெங்காயம்,நறுக்கிய பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், கருவேப்பிலை,கொத்தமல்லி,சிறிது கடுகு,உப்பு,பனை வெல்லம்,சிறிது நெய் சேர்த்து கிளறி விடவும்.

வெல்லப்பாகு பச்சரிசி :

 சேலம் சுகவனேசுவரர் கோவில் பிரசாதம்.

பொன்னி அரிசி ஒரு கப் பொங்கும் வரை ஒரு 4 மணி நேரம் ஊற வைத்து,எடுத்து வடிக்கட்ட வேண்டும்.கரும்பு வெல்லத்தை நுணுக்கி அதனுடன் சேர்த்து,ஏலக்காய் 2,பச்சை கற்பூரம் 2 இடித்து சேர்க்க வேண்டும்.

வேர்க்கடலை மசாலா சுண்டல் : 

பூலாவரி பசுவனந்தீஸ்வரர் பிரசாதம்.

நிலத்தில் புடுங்கிய வேர்க்கடலையை கழுவி,பருப்பு எடுத்து கொள்ள வேண்டும்.அதனுடன் துருவிய கேரட்,பீட்ரூட்,நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை,கொத்தமல்லி,புதினா,கடுகு,செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்,சாட் மசாலா,சாம்பார் மசாலா,மிளகு தூள்,தனியா தூள் சேர்த்து கலக்கி செய்தித்தாளில் பரிமாறலாம்.

சிவப்பு நண்டு பூண்டு ரசம் சாறு : 

பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பிரசாதம்.

பெரிய பல்லுடைய பூசினார் போல் இருக்கும் பூண்டு ஒன்று போதும்,கார்ப்பு அதிகம் இருக்கும்.
தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தோல் உரிக்கவும்.ஒரு பாக்கு இடிக்கும் கல்லில்,உரித்த பூண்டு 10 பல்லு,எலுமிச்சை அளவு கரும் புளி,ஒரு தோல் உரித்த நாட்டு தக்காளி,பெருங்காயம் 1 சிட்டிகை,குழம்பு வடகம் 1/4,கடுகு, கல் உப்பு,குண்டு மிளகாய் வற்றல் 4,சீரகம் 1 ஸ்பூன்,மிளகு ஒரு ஸ்பூன்,சூரியகாந்தி எண்ணெய் தேவைக்கேற்ப சேர்த்து இடித்து உருண்டை பிடித்து கொள்ளவும்.நண்டை நன்றாக கழுவி ஓடு நீக்கி சதையை இடித்து  கொள்ளவும்.இதை மேற்கொண்ட மசாலா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து ஊறவைத்து ஒரு நாள் பிரீசெரில் ஊற வைத்து நீர் சேர்த்து பருகவும்.

பட்டாணி பருப்பு முட்டைகோஸ் சாலட் :

அத்தனூர் அம்மன் கோவில் பிரசாதம்.

 பட்டாணி பருப்பை 6 மணி நேரம் ஊற வைத்து நுரைத்து வரும்போது கழுவி நீர் மாற்றி 6 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.பிறகு நீரை நீக்கி ஒரு தட்டில் படர விட்டு இரண்டு நாட்கள் முளைப்பு வரும் வரை குளிரில் வைக்கவும்.நர நரவென்று இருக்கும்.முட்டைகோசை ஒரு வாரம் குளிரில் வைத்து பதப்படுத்தவும்.பின்னர் அதனை எடுத்து நீளவாக்கில் முள் போன்று அறியவும்.பிறகு அதில் இந்துப்பு,உப்பு,கரம் மசாலா,சிட்ரிக் அமிலம் சேர்த்து இரண்டு மணி நேரம் நீர் விட வைக்கவும்.பட்டாணி பயரோடு கலந்து பரிமாறவும்.



















Comments

Popular posts from this blog

ஆரோக்கிய சமையல்

மகா தேவி